இன்று முதல் அடுத்துவரும் சில நாட்களுக்கு நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் நிலவும் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் 75 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 30 முதல் 35 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இடியுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.