யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்காக புதுக்குடியிருப்பு வள்ளி புணம் பகுதியில் இருந்து பெறுமதி மிக்க கட்டு காயா தடிகளை வெட்டி கப்ரக வாகனம் ஒன்றில் சூட்சுமமான முறையில் மறைத்து சென்று கொண்டிருந்த சந்தேக நபர்கள் நேற்று 24.12.2024 இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தர்மபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக வீதி சோதனையின் மூலம் கப்ரக வாகனமும் அதன் சாரதியும் மற்றும் ஒரு நபரும் தர்மபுர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பெறுமதி மிக்க காயா தடிகளும் பொலிஸாரால் பறி முதல் செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தினம் 25.12.2024 சந்தேக நபர்களை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.