தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பாரவூர்தி ஒன்று கஹதுடுவ நுழைவாயிலுக்கு அருகில் உள்ள பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தை அடுத்து குறித்த பாரவூர்தி சுமார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
மாத்தளை பிரதேசத்தில் இருந்து எல்பிட்டிய பகுதிக்கு டொலமைட் மூடைகளை கொண்டு சென்ற பாரவூர்தி சரிவில் கவிழ்ந்த போது 50 கிலோ எடையுள்ள 600 டொலமைட் மூடைகள் இருந்ததாகவும், விபத்தின் போது பாரவூர்தி 3 தடவைகள் உருண்டுள்ளதாகவும் விபத்தில் பாரவூர்தியின் சாரதிக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பாக பாரவூர்தியின் சாரதியிடம் விசாரணை நடாத்திய போது, மூன்று நாட்களாக சரியாக தூங்கவில்லை என தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெற்கு நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.