நத்தார் பண்டிகையை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
இன்று ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்றிருந்த 389 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்திருந்தது.
அந்தவகையில் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் சிறுகுற்றங்களுக்காக தடுத்துவைக்கப்பட்டிருந்த 8 பேர் இன்று (25) விடுவிக்கப்பட்டனர்.