பதுளை, ஹாலிஎல, புளுகஹமட வாவியில் மிதந்த நிலையில் பெண் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கந்தேகெதர பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் ஹாலிஎல, உதேனிகம பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய பெண் ஆவார்.
குறித்த பெண் கடந்த 18 ஆம் திகதி காலையிலிருந்து காணாமல் போயிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தேகெதர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.