கொழும்பு, தெமட்டகொடை பகுதியிலுள்ள மேம்பாலத்தின் அடியிலிருந்து பிறந்து இரண்டு நாட்களேயான சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
வீதியில் பயணித்த நபரொருவர் மேம்பாலத்திற்கு அடியில் சிசு ஒன்று கிடைப்பதைக் கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சிசுவை மீட்டு கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் சிசு ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சிசுவை மேம்பாலத்திற்கு அடியில் வைத்து விட்டுச் செல்லும் காட்சிகள் வீதியிலிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெமட்டகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.