நீண்டகாலமாக சுகாதார தொண்டர்களாக வடமாகணத்தில் கடமையாற்றிய 389 சுகாதார தொண்டர்களுக்கு கடந்த 2018 ம் ஆண்டு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டு அரசியல் காரணங்களுக்காக மறுநாள் அரசாங்கத்தால் இரத்து செய்யப்பட்டது. அவர்களுக்கான நியமனத்தை அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் வழங்கவேண்டும் என வடமாகாண ஜனசவிய சுகாதார சேவைகள் சங்க செயலாளர் முகுந்தன் புதிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்
நேற்று அவர் வடமராட்சியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
நீண்டகாலமாக தொண்டர்களாக பணியாற்றியவர்களுக்கு 2018 ம் ஆண்டு காலப்பகுதியில் வழங்கப்பட்ட நியமனம் அரசால் மறுநாளே நிறுத்தப்பட்டிருந்தது.
சிற்றூழியர்களுக்கான அந் நியமனத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வடமாகாணத்தில் கனிஷ்ட ஊழியர்கள் மிகவும் பற்றாக்குறையாக காணப்படுகின்றனர் என்றும், 2018ம் ஆண்டு காலப்பகுதியில் அப்போதைய ஜனாதிபதி, ஆளுநர் மற்றும் சுகாதார சேவைகள் அமைச்சருக்கும் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க கோரி கடிதம் அனுப்பியிருந்தோம்.
அதனடிப்படையில் 2019ம் ஆண்டு 389 பேருக்கு குறித்த நியமனம் வழங்கப்பட்டது. அதன்பின்பு அரசியல் வாதிகள் சிலரின் தலையீட்டால் 389 பேருக்கும் வழங்கப்பட்ட நியமனம் நிறுத்தப்பட்டது.
நிரந்தர நியமனம் கோரி நீதிமன்றம் வரை சென்றுள்ளோம். ஆனாலும் இதுவரை 389பேருக்குமான நியமனாங்கள் மீள வழங்கப்படவில்லை.
வடமாகாணத்தில் அதிகளவான சிற்றூழியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. புதிய பிரிவுகளை நிறுவியுள்ளதால் அதற்கான ஆளனி பற்றாக்குறை நிலவி வருகின்றது. இருக்கின்ற ஆளணிகளும் ஓய்வில்லாது வேலை செல்வதால் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
இவற்றை மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் கருத்திற் கொண்டு வழங்கப்பட்டு இடை நிறுத்தப்பட்ட நியமனங்களை மீண்டும் வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.