அனலைதீவிலிருந்து மீன்பிடிக்க சென்று இயந்திர கோளாறு காரணமாக இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.
இவர்களில் இரு மீனவர்கள் யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்தவர்களும் ஒருவர் மட்டக்களப்பு வந்தாறுமூலையைச் சேர்ந்தவராக உள்ளார்.
இவர்கள் கடந்த 07 மாதங்களுக்கு முன்னர் அனலைதீவு கடற்பரப்பிலே கடந்த மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளை இயந்திர பழுதின் காரணமாக இந்தியாவின் கரையோரத்தை சென்றடைந்தனர் இதன் பின்னர் இவர்களை சிறைப்பிடித்த இந்திய கடற்படையினர் சிறிது காலம் சென்னை புழல் சிறையிலும் அதற்கு பின்பு திருச்சி இடைத்தங்கல் முகாமிலும் தங்க வைத்திருந்தனர்.
அண்மையில் புதிய அரசாங்கம் பதவி ஏற்றதற்கு பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான உரையாடலிலும் புதிய கடற்றொழில் அமைச்சர் அவர்களின் முயற்சியினாலும் குறித்த மூன்று மீனவர்களும் இன்றைய தினம் விடுக்கப்பட்டனர்.
இவர்களில் அனலைதீவைச் சேர்ந்த நாகலிங்கம் விஜயகுமார் 36 வயது, ஒரு பிள்ளையின் தந்தை மைக்கல் பெனான்டோ 44 வயது 3 பிள்ளைகளின் தந்தை ஆகிய இருவரும் அனலைதீவைச் சேர்ந்தவர்கள்