கொங்கோவின் மைடொபி மாகாணத்திலுள்ள பெமி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை சுமார் 25 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த படகில் 100ற்கும் மேற்பட்டோர் பயணித்ததாகவும் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புப்பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
மேலும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.