77 நாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கு ஒன்லைன் மூலம் பிறப்பு சான்றிதழை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பதவாளர் திணைக்களத்தின் பதிவாளர் நாயகம் விஜயசிங்க தெரிவித்தார்.யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு பதிவாளர்களை சந்தித்து கலந்துரையாடிய பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார் இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,அமைச்சுடன் இணைந்து இலங்கைக்கு வெளியே வசிக்கின்ற 77 நாடுகளில் வசிக்கின்ற பிரதிகள் தங்களுடைய பிறப்புச் சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் பெற முடியும். நாங்கள் இரு வாரங்களுக்கு முன்பாக 7 நாடுகளோடு இணைந்து இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடினோம் அது சாத்தியமாக அமைந்துள்ளது. வெளிநாட்டில் இருப்பவர்களும் எங்களுடைய பிரஜைகள் என்ற அடிப்படையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. பதிவாளர் திணைக்களத்தின் பணிகள் பரந்துபட்டது. யாழ்பாணத்தில் பெண் பதிவாளர்கள் அதிகமாக இருப்பதால் எமக்கு வேலை செய்வது இலகுவாக அமைந்துள்ளது. பிறப்பு இறப்பு திருமண விடயங்களில் பெண்களின் கவனம் அதிகமாக இருக்கும்.மக்களினுடயை சேவையை மேம்படுத்தி நடக்கவேண்டும் .வெளிநாட்டு அமைச்சுடன் இணைந்து இலங்கைக்கு வெளியே 77 நாடுகளில் வசிக்கின்ற பிரஜைகளுக்கு தங்களுடைய பிறப்புச் சான்றிதழ்களை ஒன்லைன் மூலம் பெறுவதற்கான நடவடிக்கைகளை இலங்கை பதிவாளர் திணைக்களம் ஏற்படுத்தியுள்ளது . நாங்கள் இரு வாரங்களுக்கு முன்பாக 7 நாடுகளோடு இணைந்து இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடினோம் அது சாத்தியமாக அமைந்துள்ளது. வெளிநாட்டில் இருப்பவர்களும் எங்களுடைய பிரஜைகள் என்ற அடிப்படையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. பதிவாளர் திணைக்களத்தின் பணிகள் பரந்துபட்டது. யாழ்பாணத்தில் பெண் பதிவாளர்கள் அதிகமாக இருப்பதால் எமக்கு வேலை செய்வது இலகுவாக அமைந்துள்ளது. பிறப்பு இறப்பு திருமண விடயங்களில் பெண்களின் கவனம் அதிகமாக இருக்கும். மக்களினுடயை சேவையை நாம் மேம்படுத்தி நடக்கவேண்டும்.
தெற்கிலிருந்து வடக்கிற்கு வருவது என்பது ஒரு முக்கியமான விடயமாகும். நாட்டை அழகுபடுத்துவதற்காக பதிவாளர்கள் நீங்கள் அனைவரும் பணிபுரிகின்றீர்கள். சேவைகளை வழங்குவதும் பெற்றுக் கொள்ளுவதும் எங்களது நோக்கமாக இருக்கின்றது. அதன் மூலம்தான் தனிநபர், சமூகம் நாடு எல்லாம் எழுந்துள்ளது. நாங்கள் விருத்தி செய்ய தவறுவோமானால் பிறரும் பாதிக்கப்படுவர். எம்மை நாம் பார்க்காத பொழுது எங்களுடைய குடும்பம் பாதிகப்படுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுகிறது. தொடர்ந்து சமூகம் நாடு பாதிப்படையும்.எங்களுடைய திணைக்களத்திற்க்கு என்பது உங்களுடைய அளப்பரிய பணி அவசியமானது . திணைக்களத்திற்கான உத்தியோகபூர்வ தொடர்பு உங்கள் மூலம் ஏற்படுகின்றது. மாவட்டத்தினுடைய அரசாங்க அதிபர் மேலதிக பதிவாளராக இருக்கின்றார்.பிரதேச செயலாளர்கள் உதவிப் பிரதேச பதிவாளர்களாக செயற்படுவர். அரசாங்கம் பதிவாளர் திணைக்களம் மூலம் சமூக சேவை வழங்குவதற்கு ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு நடைமுறையாகும். பதிவாளர் திணைக்களத்தில் முக்கியத்துவம் காரணமாகத்தான் இது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. பதிவாளர்கள் இணைந்திருப்பது பொது மக்களுக்கு சேவையை வழங்குவதற்காக ஆகவே நீங்கள் ஒரு பொறுப்பு வாய்ந்த பணியிலே இருக்கின்றீர்கள். அடிப்படையான ஆவணங்களை தயாரிப்பது நீங்கள் தான் . மரணச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் ஏனைய மாவட்டங்களில் பதிவுகளின் பொழுது திருத்தங்கள் இருந்தால் தொலைபேசி மூலமாக அறிவிக்கபடும். ஆனால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து கிடைக்கப்பெறுகின்ற ஆவணங்கள் மிகவும் தெளிவாக அமைந்திருக்கும். மற்றவர்களுடைய துன்பங்கள் இன்பங்களை நாங்கள் சரியாக அறிந்து கொள்ள வேண்டும். பிறப்பின் பொழுது தாயினையும் திருமணத்தின் பொழுது மணமக்களையும் இறப்பின் பொழுது உறவுகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.பதிவாளர் திணைக்களத்தின் வயது 160 ஐ தாண்டுகின்றது. ஆவணங்களை நாம் பாதுகாக்க தவறினால் வெளியில் இருப்பவர்கள் எவ்வாறு பாதுகாப்பார்கள். எங்களுடைய திணைகளத்திற்க்கு நல்ல பெயர் உண்டு. நாங்கள் அந்த பெயரை தொடர்ந்து சம்பாதிக்க வேண்டும் திணைக்களத்திற்கு நல்ல பெயரை பெற்றுக்கொள்வது இலகுவானது.டிஜிட்டல் மயப்படுத்தலை மேற்கொள்வதற்கு முன்பாக குறித்த ஆவணம் சரியான முறையில் எழுதப்பட்டு இருக்கின்றதா என்பது தொடர்பில் நாம் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும்.பிறப்பு இறப்பு விவாகரத்து தொடர்பாக டிஜிட்டல் வடிவங்களில் வழங்குவதற்கு நாங்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம்.2005 இலிருந்து அதனை தொடங்கனாலும் 19 வருடங்கள் கடந்துள்ளன. அடையாள அட்டை எம்மை அடையாளப்படுத்துவதற்கு மூல ஆவணமாக இருந்தாலும் அதனை வழங்குவதற்கு பிரதான சான்றாக பிறப்பு சான்றிதழ் காணப்படுகின்றன.இதன் மூலம் நாட்டில் உள்ள அனைத்து ஆவணங்களும் ஒன்றிணைக்கப்படுகிறது. எதிர்காலத்தில் அடையாள அட்டை பணிகளை விநியோகிக்கின்ற பொழுது ஆட்பதிவு திணைக்களம் மற்றும் பதிவார் திணைக்களம் இணைந்து செயற்திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளது .இலங்கையில் காணாமல் போனவர் தொடர்பாக பதிவுகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது காணிப்பதிவுகளும் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. நாட்டிற்கு தேவையான ஆவணங்களை நாங்கள் வழங்க வேண்டியிருக்கின்றது அந்த ஆவணங்கள் நாட்டிற்கு தேவையாக இருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தர்.