வவுனியாவில் எலிக்காய்ச்சல் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வவுனியா, தாலிக்குளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும், அவருக்குக் காய்ச்சல் சுகமாகாமையால் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு எலிக்காய்ச்சல் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு அங்கு மேலதிக சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.