அன்ரன் பாலசிங்கத்தின் 18வது நினைவு தினம் வடமராட்சியில் அனுஷ்டிப்புமுள்ளியான்(82)தமிழ்தேசத்தின் அரசியல் ஆணிவேராக திகழ்ந்த தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் ஐயாவின் 18வது நினைவு தினம் ஜனநாயக போராளிகள் கட்சியினரால் இன்று 14.12.2024 பருத்தித்துறையில் அனுஷ்டிக்கப்பட்டது. ஈகைச்சுடரினை ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் அவர்கள் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினார் அதனை தொடர்ந்து மலர்வணக்கத்தில் ஏனைய கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டு தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தலை மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டித்தனர்.