தற்போது வடமராட்சி, வடமராட்சி கிழக்கு பகுதிகளில் பரவிவரும் எலிக்காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கைகளாக வீடுவீடாக சென்று எலிக்காய்ச்சல் தடுப்பதற்க்கான விழிப்புணர்வு கருத்துக்கள் மக்களுக்கு வழங்கப்படுவதுடன் தடுப்பு மருந்தாக doxicycline மருந்தும் வழங்கப்பட்டு வருகிறது.
இந் நடவடிக்கையில் ஆம்பன் பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி மருத்துவ கலாநிதி சிவசுதன் தலமையிலான குழுவினரே ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மைய நாட்களாக வடமராட்சி பகுதியில் சில மரணங்கள், மற்றும் தொற்றுக்குள்ளான பலர் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.