வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, எதிர்வரும் 12ஆம் திகதி, தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கை – தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, வங்காள விரிகுடாவில் மணிக்கு 55 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையின் கிழக்கு கடலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு காரணமாக எதிர்வரும் நாட்களில் நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் இதன் காரணமாக டிசம்பர் 10ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related Posts
டெங்கு அதி அவதான வலயங்களின் பட்டியல் வெளியானது!
நாடு முழுவதும் நிலவும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், ஒழிப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கும் இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு உட்பட்ட 538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதி அவதான வலயங்களாக...
GIT பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!
அரசு மற்றும் தனியார் பாடசாலைகளில் 12 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்காக நடத்தப்படவுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கான...
மதுபான சாலைகளுக்கு பூட்டு!
2026 ஆம் ஆண்டு பொசன் பூரணை போயா தினம் மற்றும் தேசிய பொசன் வாரத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மதுவரி திணைக்களத்தின்...
பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் இன்றும் சம்பு புற் தரவைக்கு விஷமிகள் தீ வைத்தனர்!
யாழ் - பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் வலிக்கண்டி பகுதியில் இன்றைய தினமும் விஷமிகளால் சம்பு புற் தரவைக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் உருவான கரும்புகையால் சில நிமிடங்கள்...
சிஐடிக்கு எதிராக சுரேஷ் சலேயின் மனைவி முறைப்பாடு!
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலேயின் மனைவி மனோரி சலே, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு எதிராக குற்றங்களால் பாதிக்கப்பட்டோர்...
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நாடு இழக்க நேரிடும் – ஜி.எல். பீரிஸ் எச்சரிக்கை!
இலங்கையில் தற்போது அரங்கேறி வரும் தன்னிச்சையான கைது நடவடிக்கைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் காரணமாக ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நாடு இழக்கும் பாரிய பொருளாதார அபாயம்...
சுரேஷ் சலேவை கைது செய்தமை ஒரு கேலிக்கூத்தான விடயம் – சரத் வீரசேகர சாடல்!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான தற்போதைய விசாரணைகள் முற்றிலும் அரசியல் மயமாக்கப்பட்டு, வெறும் அரசியல் பழிவாங்கலாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர...
நாட்டில் புதிதாக 10 இலட்சம் ஏழை மக்கள் உருவாக்கியுள்ளனர்!
வளமான நாடு, அழகான வாழ்க்கை" என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, கடந்த ஒன்றரை முதல் இரண்டு ஆண்டு காலப்பகுதிக்குள் நாட்டில் புதிதாக 10 இலட்சம்...
யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டம் நடத்த தீர்மானம்!
வடக்கு மாகாணத்தில் நிலவும் வேலைவாய்ப்பு வெற்றிடங்களுக்குப் பட்டதாரிகளை உள்ளீர்க்கக் கோரியும், ஆசிரியர் நியமனப் போட்டிப் பரீட்சை அநீதிகளுக்கு எதிராகவும் நாளைமறுதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் முன்பாகப்...
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது மரபணுக்களைச் சேகரிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை!
இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமோ அல்லது ஏனைய அரச நிறுவனங்களோ காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களின் மரபணு மாதிரிகளைச் சேகரித்து, அதனைப் பாதுகாக்கும் செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்கவில்லை...










