நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்சுணா அணியியினரால் பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 70 குடும்பங்களுக்கு நேற்று பிற்பகல் தலா 5 kg அரிசி பொதியும் சிறுவர்கள் உள்ள சுமார் இருபது குடும்பங்களுக்கு அங்கர் பால்மாவும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இதில் கலாநிதி வை.ஜெகதாஸ் மற்றும் இராமநாதன் அர்சுனா அணியினர் பலரும் இணைந்திருந்தனர்.
இதேவேளை கற்கோவளம் கிராம சேவகரால் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்களின் வீடுகளுக்கும் இராமநாதன் அர்சுனா அணியினர் சென்று சம்பவம் தொடர்பில் கேட்டறிந்தமை குறிப்பிடதக்கது.