கொழும்பு – கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றின் 7வது மாடியிலிருந்து கீழே குதித்து அவுஸ்திரேலியா பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
51 வயதுடைய அவுஸ்திரேலியா பிரஜை ஒருவரே இன்று செவ்வாய்க்கிழமை (03) காலை உயிரிழந்துள்ளார்.
இவர் இந்த தொடர்மாடி குடியிருப்பில் தற்காலிகமாக தங்கியிருந்த நிலையில் தனது உயிரை மாய்த்துக்கொள்வதற்காக 7வது மாடியிலிருந்து கீழே குதித்துள்ளதாகவும், உயிரிழந்தவர் இரட்டை பிரஜாவுரிமை பெற்றவர் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.