நேற்றையதினம் மாலை கலட்டி அம்மன் கோயில் தட்டாதெருவுக்கு அன்மையில் வைத்தியர் ஒருவரின் விட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளின் பின் டிக்கியை உடைத்து பணத்தினை திருடி சென்ற இருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் குறித்த திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவது CCTV கேமராவில் பதிவாகிய நிலையில், கேமராவின் உதவியுடன் குறித்த இருவரையும் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர், இன்று காலை அரசடி நல்லூர் பகுதியில் வைத்து கைது செய்தார்கள்.அவர்கள் கைது செய்யப்படும்போது 10 போதை மாத்திரைகளையும் 240 மில்லிகிராம் ஹெரோயினையும் தம்வசம் வைத்திருந்தனர்.விசாரணைகளின்போது, அவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என்றும் போதைக்காக சிறுசிறு திருட்டுகளில் ஈடுபடுவதாக தெரிய வந்துள்ளது. விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஊடகவியலாளர் பாரதியின் மறைவு தமிழ் ஊடக உலகிற்கு பேரிழப்பு!
அச்சு ஊடகத் துறையில் ஆழமான தடங்களை பதித்த சிரேஸ்ட ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகம் அவர்களின் மறைவு, தமிழ் ஊடகத் துறைக்கு பாரிய வெற்றிடத்தை உருவாக்கி இருப்பதாக ஈழ...