யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பொற்பதி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் ஒளி விழா இன்றைய தினம் பாடசாலை அதிபர் சி. குகதாசன் தலைமையில் சிறப்பாக இடம் பெற்றுள்ளது.
இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபம் வரை அழைத்து வரப்பட்டு அங்கு மங்கள சுடர்கள் ஏற்றப்படப்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தொடர்ந்து ஆசியுரை, வரவேற்பு நடனம், வரவேற்பு உரை, தலமை உரைகள் இடம் பெற்றன.
அதனை தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன.
கருத்துரைகளை நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மணல்காடு பங்குத்தந்தை ஜோன் குரூஸ் அடிகளார், சிறப்பு விருந்தினர்களாக வலய சுகாதார பாட ஆலோசகர் ஆசிரியர் திரு பாக்கியநாதன், வளனார் சபை அருட்சகோதரி இரத்தினஜோதி,
கௌரவ விருந்தினர்களாக பொற்பதி கிராம உத்தியோகத்தர் திருமதி பி. தனுசியா, வளனார் சபை அருட் சகோதரி கிறிஸ்ரா, பொற்பதிகடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் பி. யேசுரத்தினம் ஆகியோர் நிகழத்தினர்.
இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொணடு சிறப்பித்தனர்.