வவுனியா – ஆண்டியாபுளியன்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 59 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
மின்சார தாக்குதலுக்கு உள்ளான அவர் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ADVERTISEMENT
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.