சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஐவர் இலங்கை கடற்படையினரால் நேற்று இரவு மன்னார் வங்காலை மற்றும் சிலாவத்துறை கடற்பகுதியில் நடாத்தப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 1055 கடலட்டைகள் கைப்பற்றப்பட்டன.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கில், இலங்கை கடற்படையின் வழக்கமான தேடுதல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நாட்டைச் சுற்றியுள்ள கடலோர மற்றும் கடற்பகுதிகளில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களையும் மற்றும் பிடிக்கப்பட்ட கடலட்டைகளையும் மேலதிக நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகம் மற்றும் சிலாவத்துறை கடற்றொழில் பரிசோதகரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.