தலாவ – ஹலம்பவெவ பிரதேசத்தில் அமைந்துள்ள முன்பள்ளியில், 17 சிறுவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த முன்பள்ளியின் வருடாந்த பன்முகக் கண்காட்சியின் போது, பாடசாலை மைதானத்தில் உள்ள மாமரத்தில் இருந்த குளவி கூட்டை பருந்து ஒன்று கிளறியதால், மூன்று முதல் நான்கு வயதுக்குட்பட்ட சிறுவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
பின்னர் அந்த சிறுவர்கள் தலாவ ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், மூன்று சிறுவர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.