யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் ஊடகவியலாளர் ஒருவர் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் கோப்பாய் சந்தி அருகில் பயணித்த போது இன்று காலை குறித்த சம்பவம் இடம்பெற்றது.
இத் தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் யாரும் எதிராளிகளின் திட்டமிட்ட நடவடிக்கையாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
இந் நிலையில் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தாக்குதலுக்கு உள்ளாகிய ஊடகவியலாளர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.