அம்பாறை, அறுகம்பை பிரதேசத்தில் தாக்குதல் நடாத்துவதற்குத் திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் மாலைதீவு பிரஜை உட்பட 6 பேர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.