பொறுப்பு மற்றும் பொறுப்புக் கூறலுடன் தேர்தல் தகவல்களை அறிக்கையிடல் தொடர்பில் மாகாண மட்ட பயிற்சி பட்டறை ஒன்றும் கலந்துரையாடலும் நேற்று சனிக்கிழமை 26/10/2024 யாழ் நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வுத் தொடரின் ஆரம்ப செயலமர்வு நேற்றைய தினம் இடம் பெற்றது.
இச் செயலமர்வில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் பிரதிநிதிகள், இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோரால் தேர்தல் காலத்தில் அறிக்கையிடல், தேர்தல் ஆணைக்குழுவால் கட்டுப்படுத்தக் கூடிய விதிகள் தொடர்பிலும் கருத்துரைகள் வழங்கப்பட்டன.
இதில் பங்கு பற்றிய ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இதே வேளை பிற்பகல் 3:30 மணியிலிருந்து 6:00 மணிவரை தேர்தல் ஆணைக்குழு முன்னாள் உறுப்பினர், மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபன பிரதிநிதிகள் இணைந்து ஊடகவியலாளர்கள், யாழ்.பல்கலைக்கழகத்தின் இதழியல் கற்கும் மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொது அமைப்பு பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.