சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் மலேசியாவிலிருந்து வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கொத்தட்டுவ பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவரே நேற்று கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதேநேரம், குறித்த நபரை அழைத்துச் செல்வதற்காக விமான நிலையத்துக்கு வந்திருந்த பெண்ணொருவரும் ஆண் ஒருவரும், சந்தேகநபருக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ளனர்.
காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவுக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.