உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி பெற்றால் அது உலகின் பாதுகாப்பு மற்றும் வளமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஜேர்மன் ஜனாதிபதி ஒலாஃப் ஸ்கோல்ஸ் எச்சரித்துள்ளார்.இந்தியாவுக்கு புதுடெல்லியில் நடைபெற்ற ஜேர்மனியின் 18-வது ஆசிய – பசிபிக் மாநாட்டில் பேசிய ஜேர்மன் ஜனாதிபதி ஒலாஃப் ஸ்கோல்ஸ் முக்கிய உரையை வழங்கினார்.
இதில், இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு, வர்த்தகம், தூய்மையான வர்த்தம் ஆகியவற்றில் இந்தியா-ஜேர்மனி இடையிலான ஆழமான உறவின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார்.வளர்ந்து வரும் பொருளாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை ஆகியவற்றில் இந்தியா பெரிய ஜனநாயக நாடாக சாதனை படைத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
இந்த மாநாட்டில் உக்ரைன் ரஷ்யா போரை குறிப்பிட்டு பேசிய ஜேர்மன் ஜனாதிபதி ஒலாஃப் ஸ்கோல்ஸ், போரில் ரஷ்யா வெற்றி பெற்றால் அது உலகின் பாதுகாப்பு மற்றும் வளமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார்.
மேலும் ரஷ்யாவின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு ஐரோப்பாவை மட்டுமில்லாமல் உலகின் பாதுகாப்பு மற்றும் செழுமையும் சீர்குலைக்கும் என்று தெரிவித்தார். அதே சமயம் மத்திய கிழக்கு, தென் சீனக் கடல் மற்றும் கிழக்கு சீனக் கடல் ஆகிய பகுதிகளில் நிலவி வரும் பதற்றமும் உலக அரங்கில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
புவிசார் பதற்றங்களை கட்டுப்படுத்த சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா கொள்கைகள் அடிப்படையில் பிரச்சனைகளுக்கான தீர்வை காண வேண்டும் என ஜேர்மன் ஜனாதிபதி ஒலாஃப் ஸ்கோல்ஸ் குறிப்பிட்டுள்ளார்.