தமிழ் மக்கள் கூட்டணியினரின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்றையதினம் யாழ் நகரில் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது நகரப்பகுதியில் தேர்தல் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு பொதுமக்களிடம் ஆதரவு கோரப்பட்டது.
இதில் தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் வி.மணிவண்ணன், வரதராஜன் பார்த்திபன், மிதிலைச்செல்வி பத்மநாதன் உள்ளிட்ட வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் யாழ் மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணி மான் சின்னத்தில் போட்டியிடுகின்றது.