சுற்றுலாப் பயணியாக அல்லது வேறு நோக்கங்களுக்காக இலங்கைக்கு வருகை தரும் இஸ்ரேலிய பிரஜைகளுக்கு விசேட தொலைபேசி இலக்கமொன்றை இலங்கைப் பொலிஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
தனிப்பட்ட பாதுகாப்பை வழங்கும் நோக்கில், 071-8592651 எனும் தொலைபேசி எண்ணுக்கு நேரடியாக அழைப்பை ஏற்படுத்தி தெரிவிக்குமாறு காவல்துறை அவர்களுக்குத் தெரிவிக்கிறது.
இந்த தொலைபேசி இலக்கம் பொலிஸ் சுற்றுலா மற்றும் கடல்சார் பிரிவுக்கு பொறுப்பான டி.ஐ.ஜி தமயந்த விஜய ஸ்ரீ என்பவருக்கு சொந்தமானது எனவும், அவர் தேவையை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் வழங்கும் போது உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்துவது அவசியம் என்பதால் அவர் கேட்கும் தகவல்களை தயவு செய்து தருமாறும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.