மூன்றாம் காலாண்டிற்கான நிதி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (16.10.2024) பி.ப 02.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன் போது கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர், இக் கூட்டத்தின் நோக்கமானது நிதி முகாமைத்துவம் மற்றும் கட்டுப்பாடுகள் சரியான முறையில் பின்பற்றப்படுகின்றதா என்பதனை ஆராய்வதுடன், நிதி முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதாகவும் உள்ளதாக தெரிவித்தார். அதன் பின்னர், இந்த மீளாய்வுக் கூட்டத்தில் நிதி முன்னேற்றங்களை ஆராய்ந்த வகையில் திருப்திகரமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், கணக்காளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.