மாத்தறை, ருவன்வெல்ல பிரதேசத்தில் நேற்று (15) மாலை இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் முச்சக்கர வண்டியில் பயணித்த போது, காரில் வந்த நபர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் மாத்தறை பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் “வாகனம் கைப்பற்றுபவராக” செயற்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.