யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் ஒரு வருடங்களுக்கு முன்னர் அரபு நாடு ஒன்றிலிருந்து ஐரோப்பா நாட்டிற்கு செல்ல முயற்ச்சி மேற்கொண்டு வந்துள்ளார்.
சிறு வயது முதல் தந்தையை இழந்த குறித்த இளைஞன் உறவினர்களின் உதவியுடன் ஐரோப்பா நாட்டிற்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந் நிலையில் நேற்று முன்தினம் (14.10.2024) எட்டு பேர் கொண்ட இளைஞர் குழு ஐரோப்பா ரசியா எல்லையை கடக்க முயற்சி செய்த நிலையில் குறித்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் யாழ்பாணம் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த எஸ் -ஜதுசன் என்ற 25 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
சடலத்தை நாட்டிற்கு கொண்டு வர உறவினர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இது கொலையா? அல்லது இயற்கை மரணமா என்ற சந்தேகம் தொடர்ந்த வண்ணம் உள்ளது,