எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் மீனவர்களுக்கு எரிபொருள் நிவாரணத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.
6 மாத காலம் அமுலாகும் வகையில் இந்த எரிபொருள் நிவாரணம் வழங்கப்படவுள்ளது.
இதன்படி, டீசல் மற்றும் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றுக்கு 25 ரூபாவை நிவாரணமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.