மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதுண்டதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று மாலை கட்டுகுருந்த புகையிரத நிலைய அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மூன்று வயது குழந்தையும் காயமடைந்து களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். உயிரிழந்த மூவரும் களுத்துறை தெற்கு ரஜவத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.