புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (12) காலை 08.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவுறுத்தல் நாளை ஞாயிற்றுக்கிழமை (13) காலை 08.30 மணி வரை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும். எனவே, மறு அறிவித்தல் வரும் வரை கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் கடற்பகுதிக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும், கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை முதல் அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரம் 2.5 – 3.0 மீற்றர் வரை உயரும் சாத்தியம் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.