யாழ்ப்பாண கல்வி வலயத்தின், 2024ஆம் ஆண்டுக்கான செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா இன்று (5) சிறப்பாக இடம்பெற்றது.
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி விளையாட்டு மைதானத்தில், யாழ். கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.யமுனா ராஜசீலன் தலைமையில், இன்று காலை இடம்பெற்ற செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வின் பிரதம விருந்தினாராக வடமாகாண கல்வித் திணைக்களத்தன் கல்விப் பணிப்பாளர் உயர்திரு கே.ஜே.பிறட்லி அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் ஈ.எஸ்.பி.நாகரத்தினம் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
நிகழ்வின் ஆரம்பத்தில் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் விருந்தனர்கள் அழைத்துவரப்பட்டனர். மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து கொடியேற்றல் நிகழ்வு இடம்பெற்றது. தேசியக் கொடியினை பிரதம விருத்தினர் ஏற்றிவைக்க, ஏனைய கொடிகளை கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள் ஏற்றிவைத்தனர். மாணவர்களின் ஆரம்ப உடற்பயிற்சியினை தொடர்ந்து விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இந்த நிகழ்வில் யாழ். கல்வி வலயத்தின் 34 பாடசாலைக்களின் 84 அணிகளை கொண்ட 1008 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர், என்பதுடன் 100 ஆசிரியர்கள் நடுவர் பணகளில் ஈடுபட்டிருந்தனர். இன்றைய போட்டிகளில் முதலிடங்களைப் பெறும் மாணவர்கள் நேரடியாக தேசியமட்ட போட்டிகளுக்கு தெரிவுசெய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.