யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்குநோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்றையதினம் (03.10.2024) பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டசெயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில், மழைகாலம் வருவதனால் டெங்குக் நோய் வராமல் தடுப்பதற்குரிய வழிவகைகள் பற்றி ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சமன் பத்திரண, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், மேலதிக அரசாங்கஅதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன், யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலாளர்கள், சுகாதாரவைத்திய அதிகாரிகள், சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபை செயலாளர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள்,மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.