பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு பேரணியும், விழிப்புணர்வு கருத்தரங்கும் இன்று காலை பருத்தித்துறையில் இடம்பெற்றது.
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி திருமதி
பிரிந்திகா செந்தூரன் தலமையில் காலை 9:00. மணியளவில் இடம் பெற்ற இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை முன்பிருந்து பேரணியாக பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை சென்று அங்கு விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றது.
இதில் விழிப்புணர்வு கருத்துக்களை புற்றுநோய் விசேட வைத்திய நிபுணர் தனேந்திரன் நிகழ்த்தினார். இதில் யாழ்ப்பாணம் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்நரன், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி செந்தூரன், பருத்தித்துறை பிரதேச செயலர் எஸ் சத்தியசீலன் ஆகியோரும் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினர்.
இந்நிகழ்வில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொது சுகாதார பரிசோதகர்கள், மருத்துவ மாதுக்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள், பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை மருத்துவர்கள், தாதியர்கள், மற்றும் உத்தியோகஸ்தர்கள், மாதர் சங்க உறுப்பினர்கள், தாய்மார் கழக உறுப்பினர்கள், லயன்ஸ் கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.