வவுனியாவில் இன்று (01) இடம்பெற்ற போராட்டத்தில் புகுந்து அச்சுறுத்தல் விடுத்த நபரால் குழப்பந்நிலை உருவாகியிருந்தது
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
இன்று ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினமாகும் இதனை முன்னிட்டு வவுனியாவில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது
இதன்போது திடீரென வந்த மர்ம நபர் ஒருவர் தன்னை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஆள் என்று அடையாளப்படுத்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டதுடன் அச்சுறுத்தலும் விட்டிருந்தார் இதனால் அப்பகுதியில் குழப்பநிலை உருவானது
குறித்த மர்ம நபர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கலைந்து செல்லுமாறும் பணத்திற்காக வேடம் போடும் கூட்டம் நீங்கள் என்றும் கூறியதுடன் இன புதிய அரசாங்கம் அநுரவின் அரசாங்கம் இனிமேல் இப்படியெல்லாம் செய்ய முடியாது என்றும் உடனடியாக இவ்விடத்தை விட்டு செல்லுமாறும் தவறின் அடிவிழும் என்றும் எச்சரிக்கை விடுத்து ஒருமையிலும் தகாத வார்த்தைகளாலும் பேசியிருந்தார்
இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெருமளவில் குறித்த நபருடன் முரண்பாட்டில் ஈடுபட்டிருந்ததுடன் குறித்த நபர் அப்பகுதியில் இருந்து விலகி சென்றிருந்தார்
மேலும் குறித்த பகுதியில் மிகுந்த சனநெரிசலாக காணப்பட்ட போதிலும் யாரும் முன்வந்து குறித்த நபரை தடுக்கவோ கேள்வி கேட்கவோ முன்வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது .