புதிய ஜனாதிபதி வந்ததைத் தொடர்ந்து நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பாரிய அதிர்வுஏற்பட்டுள்ளது என மாக்கிச லெனினிச கட்சியின் பொதுச்செயலாளர் சி.க.செந்தில்வேல் தெரிவித்தார்.
இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சங்கத்தின் போது இதனை தெரிவித்தார்.
எனவே நாம் ஒரு இடதுசாரி என்ற வகையில் புதிய ஜனாதிபதியை வரவேற்கிறோம்.
எம்மைப் பொறுத்தவரை இலங்கையில் உழைக்கின்ற மக்கள் தொண்ணூறு வீதமானவர்கள் இருக்கின்றார்கள்
வாழ்க்கைச் செலவு மாறி அதிகரித்து இருக்கிறது. தற்போதைய ஜனாதிபதி பாரிய மார்க்சிச நிலைப்பாட்டில் பாடிய போராட்டங்களை முன்னெடுத்து வந்தவர் தற்போது அரசியல் ரீதியாக அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.
நமது நாட்டிலேயே 76 ஆண்டுகளாக பாரம்பரிய காட்சிகள் என்று சொல்லக்கூடிய ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ளவர்கள் தான் ஜனாதிபதியாக வந்திருந்தார்கள் ஆனால் புதிதாக ஒருவர் ஜனாதிபதியாக வந்திருக்கிறார்.
எனவே அவர் முன்வைத்த தேர்தல் வாக்குறுதிகள் எவ்வாறு முன் வைத்தாரோ அதேபோல செயல்பட வேண்டும் பலர் தேர்தலுக்கு வர முன்னர் பல்வேறு விஞ்ஞாபனங்களை முன்வைப்பார்கள்.
ஆனால் அதிகாரத்துக்கு வந்த பின்னர் அவர்கள் செயல்படுவது இல்லை எனவே இவர் அவ்வாறு செய்ய மாட்டார் சொன்ன விடயங்களை செய்வார் என்பதை நான் நம்புகிறோம்.
ரனில் சர்வதேச நாணய நிதியத்தின் நிலையில் நாட்டிலே மிகப்பெரிய கடன் சுமையை கொண்டு வந்தார். எனவே இந் நிலையில் ஏழைக் குடும்பத்திலிருந்து வந்த அனுர நாட்டை மாற்ற வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம் என்றார்.