பல வருடங்களுக்கு பின் மவுசாகலை நீர் தேக்கத்தில் பெண் உடலம் ஒன்று மிதந்து உள்ளது.
நேற்று முன்தினம் மஸ்கெலியா பண்ணியன் தனியார் தோட்டத்தில் வசிக்கும் முத்துசாமி செல்வராணி வயது 50 ,நான்கு பிள்ளைகளின் தாய் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் இன்று மதியம் 3 மணிக்கு இவ்வாறு மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தில் சடலமாக கிடப்பதை கண்ட மக்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவிற்க்கு தெரிவித்தனர்.
அனைத்து தொடர்ந்து பொலிசார் அங்கு சென்று பார்த்த பின்னர் சடலம் அடையாளம் காணப்பட்டது.
சம்பவ இடத்திற்கு ஹட்டன் நீதிமன்ற பதில் நீதிபதி வந்து பார்த்த பின்னர் உடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட உள்ளது.