தலவாக்கலை கிறேட்வெஸ்டன் தோட்ட தொழிற்சாலையில் உத்தியோகத்தராக வேலைசெய்யும் ஒருவர் அவரது மனைவியுடன் நகைக் கடையொன்றில் இரண்டரை இலட்சம் பெறுமதியாக இரண்டு தங்க காப்புகளை வாங்கிக்கொண்டு தலவாக்கலை கிறேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் முச்சக்கரவண்டியில் தமது வீட்டுக்கு திரும்பி வந்துள்ளனர்.
இந்நிலையில் வாங்கி வந்த தங்க காப்புகளை முச்சக்கரவண்டியிலேயே தவறவிட்டுள்ளனர்.
தமது வீட்டை வந்தடைந்த தேயிலை தொழிற்சாலை உத்தியோகத்தரும் அவரது மனைவியும் தங்க காப்புகளை தவறவிட்டதையறிந்து அங்கும் இங்கும் அதனை தேடியுள்ளனர்.
அப்போது தனது முச்சக்கரவண்டியில் கிடந்த தங்கக் காப்புகளை தவறவிட்டவரின் வீட்டுக்கே தேடி வந்து காப்புகளை அவரிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.
இவ்வாறு முன்மாதிரியாக செயற்பட்ட நபர் கிறேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியான ஞானகிராமன் (பண்டா) என்பவராவார். இவரின் நேர்மையான செயலை தலவாக்கலை பிரதேச மக்கள் பாராட்டுகின்றனர்.