Browsing: வவுனியா செய்திகள்

வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபயிற்சிக்கு வருகை தந்தவரின் நகைகளை திருடிய சம்பவம் தொடர்பில் 32 வயது இளைஞன் ஒருவர் இன்று (16.02) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நடை பயிற்சிக்காக கடந்த சில நாட்களாக வவுனியா நகரசபை மைதானத்திற்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில் வழமை போன்று நேற்று வியாழக் கிழமை (15.02) மாலையும் நகரசபைக்கு வருகை தந்துள்ளார். இதன் போது தான் அணிந்திருந்த சங்கிலி, காப்பு உள்ளிட்ட […]

கிணறு ஒன்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் இன்று(16) காலை மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, செட்டிகுளம், வீரபுரம் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பம் ஒன்றுக்குள் ஏற்பட்ட வாய் தர்க்கத்தையடுத்து கணவனான இளம் குடும்பஸ்தர் வீட்டில் இருந்த கிணற்றுக்குள் குதித்துள்ளார். இதனையடுத்து, மனைவியும், பிள்ளைகளும் அயலில் உள்ளவர்களை அழைத்து மீட்க முயற்சித்தனர். அப் பகுதி மக்களின் துணையுடன் உயிரிழந்த நிலையில் அவர் மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சடலம் செட்டிகுளம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதுடன், […]

வவுனியா, கோவில்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்து இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வவுனியா, முதலாம் குறுக்குத்தெரு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றியுள்ளார். இரவு வகுறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் கோவில்குளம் பகுதியில் உள்ள வீட்டில் தங்கி நின்றுள்ளனர். இந்நிலையில், குறித்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கும், அங்கு பணியாற்றுபவருக்கும் இடையில்  (13.02) காலை ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து வர்த்தக நிலைய உரிமையாளர் தன் மீது கத்தியால் […]

வவுனியா பிரதேச செயலகத்தில் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் வழங்குவதில் தாமதம் ஏற்ப்பட்டமையால் அவற்றை பெற்றுக்கொள்ளச்சென்ற பொதுமக்கள் அந்தரிப்பிற்குள்ளாகினர். வவுனியா பிரதேசசெயலகத்தில் அமைந்துள்ள மேலதிக மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு பிறப்பு இறப்பு திருமணச்சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்காக இன்றையதினம் பொதுமக்கள் சென்றிருந்தனர். காலை 9 மணிக்கு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டநிலையில் மாலை 3 மணிவரை பொதுமக்கள் காக்க வைக்கப்பட்ட போதிலும் பலருக்கு சான்றிதழ்கள் கிடைக்கப்பெறவில்லை. இதனால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு உள்ளாகினர். அவசரத் தேவை நிமித்தம் சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்திருந்தோம் எனினும் […]

வவுனியாவில் பாதசாரி கடவையூடாக வீதியினை கடக்க முயன்ற மாணவனை மோட்டார் சைக்கிள் மோதியதில் மாணவன் சகாயங்களுக்குள்ளாகியுள்ளார். வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள பாதசாரிகள் கடவையில் இன்று மதியம் இடம்பெற்றது. துவிச்சக்கரவண்டியில் பாதசாரி கடவையூடாக வீதியினை கடக்க முயன்ற மாணவனின் துவிச்சக்கரவண்டி மீது நகரிலிருந்து ஏ9 வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் மாணவன் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளமையுடன் மாணவனின் துவிச்சக்கரவண்டியும் பகுதியளவில் சேதமடைந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக […]

வவுனியா புளியங்குளம், பழையவாடியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான பண்ணைகாணியில் இருந்து யானை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது. நேற்றையதினம்(08) குறித்த காணியில் யானை ஒன்று சடலமாக கிடப்பதை அவதானித்த காணியின் உரிமையாளர் புளியங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்ததால் அதற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற புளியங்குளம் பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையின் இறப்பு தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்தனர். உயிரிழந்த யானை24 வயது மதிக்கத்தக்கது எனவும் சடலம் இன்று உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில், அக்காணியின் […]

வவுனியா, கந்தபுரம் பகுதியில் மோட்டர் சைக்கிளில் வந்த இருவர் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளதாக வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா, கந்தபுரம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் வீதியில் சென்ற போது பின் தெர்டர்ந்து மோட்டர் சைக்கிளில் சென்ற இருவர், குறித்த பெண்ணிடம் வேறு ஒருவரின் முகவரி விசாரிப்பது போன்று கதைத்து விட்டு அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா பொலிசார் விசாரணைகளை […]

வவுனியாவில் உள்ள கடவுச்சீட்டு காரியாலயத்தின் முன்பாக உள்ள மரம் ஒன்றில் கடவுச்சீட்டு பெற வந்த நபர் ஒருவர் திடீரென மரத்தில் ஏறி தற்கொலை செய்வேன் என்று கூறியதால்…

வவுனியா குருமன்காடு காளி கோவில் வீதியில் உள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது இது தொடர்பாக மேலும் தெரியவருவாதவது, வவுனியா காளி கோவில்…

வவுனியா, புளியங்குளம் பகுதியில் மோட்டர் சைக்கிள் ஒன்றின் இருக்கைக்குள் மறைத்து கொண்டு செல்லப்பட்ட கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிசார் இன்று (13.01) தெரிவித்தனர்.…