Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இலங்கை செய்திகள்
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனம் மீது, இன்றைய தினம் (07) துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத மணலுடன் , டிப்பர் வாகனமொன்று வேகமாக பயணிப்பதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , புத்தூர் பகுதியில் வைத்து டிப்பர் வாகனத்தை வழிமறித்துள்ளனர். இதற்கமைய, டிப்பர் சாரதி வாகனத்தை நிறுத்தாது சென்றமையால் , வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ள நிலையில் டிப்பர் வாகனம் வீதியில் குடைசாய்ந்தது. சட்டவிரோத மணல் […]
இலங்கை கடற்பரப்பில் கடந்த மாதம் 23 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 6 இந்திய மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த 23 ஆம் திகதி 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், 2 படகுகளும் கைப்பற்றப்பட்டன. 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனை என்ற நிபந்தனையின் அடிப்படையில், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் 6 மீனவர்களும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்
பெலியத்தையில் ஜனவரி 22 ஆம் திகதி ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டத்தரணி ஊடாக பெலியத்த பொலிஸாரிடம் நேற்று ஆஜராகிய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர், இம்புல்கொட அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
தனது இரண்டு பிள்ளைகளை கொடூரமாகத் தாக்கி வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட தந்தை ஒருவர் இன்று கைது செய்யப்பட்டதாக திம்புல்ல பத்தனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸார் தெரிவித்தார். திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள தனது மனைவி வீட்டில் வசிக்கும் 33 வயதுடைய நபர் கடந்த திங்கட்கிழமை 09 மற்றும் 05 வயதுடைய தனது இரண்டு பிள்ளைகள் மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸ் நிலையக் கட்டளைத் தளபதி தெரிவித்தார். இதற்கமைய, பிள்ளைகளின் தாயார் வெளியூரில் […]
இலங்கை கடற்படையின் 14 ஆவது கடற்படைத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற அட்மிரல் டி.டப்.கே.தயா சந்தகிரி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து அரசியல் பயணத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். கடல்சார் மற்றும் கடற்படைத் துறையில் அவருக்கு இருக்கும் பரந்த அறிவு மற்றும் அனுபவத்தினை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவரை ஐக்கிய மக்கள் சக்தியின் கடல்சார் மற்றும் கடற்படைக் கொள்கைகள் குறித்த ஆலோசகராக இன்றைய தினம் […]
மடு கல்வி வலயத்திற்குட்பட்ட மன்/கள்ளியடி பாடசாலையில் தொடர்ச்சியாக மூன்று ஆசிரியர்களை வேறு பாடசாலைக்கு இணைப்பு செய்துள்ளனர்.மேலும் கள்ளியடி பாடசாலையில் கடமையாற்றும் அதிபரை இடமாற்றம் செய்து கள்ளியடி பாடசாலையில் அதிபர் இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. தற்பொழுது பாடசாலை அதிபர் மற்றும் மூன்று ஆசிரியர்கள் இல்லாமல் கள்ளியடி பாடசாலையில் மாணவர்கள் கல்வியை தொடர்கிறார்கள் இதற்கு மடு வலயக் கல்விப் பணிப்பாளரின் செயல்திறனற்ற தன்மையே காரணம் என கள்ளியடி கிராம மக்கள், பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர். மன்னார் மடு கல்வி வலயத்திற்கு […]
மீனவர்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக முன்னாள் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேள முன்னாள் தலைவர் அ.அன்னராசா மற்றும் முன்னாள் உப தலைவர் நா.வர்ணகுலசிஙகம் ஆகியோர் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பு.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்துக்கான இலவச அம்புலன்ஸ் சேவை(1990) கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் பெரும் துன்பங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும் குறித்த அவசர அம்புலன்ஸ் (1990) வண்டியானது பிரதானமாக ஏ 9 வீதியில் இடம்பெறும் விபத்துகளின் போதும் போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கும் பாண்டியன்குளம், நட்டாங்கண்டல், மல்லாவி,கோட்டைகட்டிய குளம், அம்பலப்பெருமாள் மற்றும் அம்பகாமம் தச்சடம்பன், ஒலுமடு உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்களும் […]
கிளிநொச்சி, தருமபுரம் பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கணை கோரைமூட்டை பகுதியில் சட்டவிரோதமான கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர், தருமபுர பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக நேற்றைய தினம் 05.02.2024கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிந்து 2468 போத்தல் கோடாவும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் இன்றைய தினம் 06.02.2024 கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பொழுது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என தருமபுரம் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
போலி நாணயத்தாள்களை தம்வசம் வைத்திருந்த ஒருவர் மொரட்டுவை- எகொட உயன பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 5 ஆயிரம் ரூபா பெறுமதியான 30 நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 37 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியென தெரிவிக்கப்படுகிறது.