Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: லண்டன்
டிஜிட்டல் மார்கெட் துறையில் பணியாற்றும் ஸ்பானிஷ் இந்திய மொடலான ஷாரதா என்னும் பெண், திருமணப் பெண்போல் லெஹங்கா உடை அணிந்து லண்டன் மெட்ரோவில் நடந்து திரிகிறார். சாலையில் நடந்து செல்லும் அவரை அங்குள்ளவர்கள் பார்த்து திகைக்கின்றனர். ஒரு சிலர் அவரை புகைப்படமும் எடுத்துக் கொள்கின்றனர்.
பிரித்தானியாவின் தொழில் முயற்சியாளர்கள் இலங்கையில் உயர்கல்வித் துறையில் முதலீடு செய்ய ஆர்வமாக இருப்பதாக ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார். லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் பொதுநலவாய நிறுவன மற்றும் முதலீட்டுச் சபையுடன் (CWEIC) நடைபெற்ற வட்டமேசை கலந்துரையாடலின் போதே இவ்வாறு பிரித்தானிய நிறுவனங்களின் ஆர்வம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கலந்துரையாடலில் பிரித்தானியாவின் 30 முன்னணி வணிகப் பிரமுகர்கள், மூலதனப் பிரதிநிதிகள், முதலீட்டு ஆலோசகர்கள், நிதி வல்லுநர்கள் மற்றும் ஏற்கனவே இலங்கையில் முதலீடுகளை மேற்கொண்டுள்ள வர்த்தகர்கள் எனப் […]
இலங்கையின் 76வது சுதந்திர தின நாளில் லண்டனில் தமிழர்கள் நடத்திய போராட்டத்திற்கு எதிராக தமது அரசாங்கம் பிரித்தானிய அரசாங்கத்திடம் முறையிடவுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் அதிருப்தியை லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக ஐக்கிய இராச்சியத்திற்கு தெரிவிக்கவுள்ளதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார். இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றுக்கு ஆதரவாக லண்டனில் போராட்டம் நடத்துவதை இலங்கை அரசாங்கம் பிரித்தானியாவிலுள்ள வெளிவிவகார அமைச்சின் கவனத்திற்குக் கொண்டுவரவுள்ளதாக அவர் […]