எதிர் வரும் வாரங்களில் கட்டார் தனது இயற்கை எரிவாயு உற்பத்தியை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கும் என கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்-தானி தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு போர் காரணமாக ஈரான் நடத்திய தாக்குதல்களால் கட்டாரின் ‘ராஸ் லஃபான்’ எரிவாயு முனையம் சேதமடைந்தது.
இதன் விளைவாக, அரசுக்குச் சொந்தமான ‘கட்டார் எனர்ஜி’ நிறுவனத்தால் ஒப்பந்தத்தின்படி எரிவாயுவை வழங்க முடியவில்லை.
தற்போது, சேதமடைந்த பகுதியைத் தவிர ஏனைய அனைத்து உற்பத்தி நடவடிக்கைகளும் சில வாரங்களில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகின் மொத்த எரிவாயு ஏற்றுமதியில் 20% பங்களிப்பை கத்தார் கொண்டுள்ளது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தங்களுக்குப் பின்னர், எதிர் வரும் வாரங்களில் கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பும் என கட்டார் பிரதமர் நம்புவதாகக் கூறப்படுகிறது.
Related Posts
ஆண்டி பர்ன்ஹாம் குறித்து டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள கருத்துக்களால் சர்ச்சை!
நேட்டோ (NATO) பொதுச் செயலாளருடனான சந்திப்பின்போது, இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் பதவிக்கு போட்டியிட வாய்ப்புள்ள ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) குறித்து டொனால்ட் ட்ரம்ப் அலட்சியமான கருத்துக்களை...
மெட்டவின் புதிய AI தொழில்நுட்பக் கண்ணாடி அறிமுகம்!
சமூக வலைத்தளத் தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா, தனது புதிய AI தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகப்படுத்தியுள்ளது.ரே-பேன் (Ray-Ban) நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் கண்ணாடி,...
வெனிசுவேலாவை தொடர்ந்து ஜப்பானிலும் நிலநடுக்கம்!
வெனிசுவேலாவை தொடர்ந்து ஜப்பானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் 6.9 ரிக்டராக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை...
ஈரான் அளித்துள்ள தகவல்கள் பொய்யாக இருந்தால் பேச்சுவார்த்தை உடனடியாக முடிவுக்கு வரும் – டிரம்ப் எச்சரிக்கை!
ஹோர்முஸ் நீரிணையில் பயணிக்கும் கப்பல்களிடம் ஈரான் எந்தவிதமான கட்டணங்களையோ, காப்பீட்டு செலவுகளையோ அல்லது வேறு எந்தவிதமான கட்டணங்களையோ கோரவோ அல்லது பெறவோ இல்லை என்று ஈரான் தன்னிடம்...
‘ட்ரில்லியனர்’ அந்தஸ்த்தை இழந்தார் எலோன் மஸ்க்!
உலகின் முதல் ‘ட்ரில்லியனர்’ (Trillionaire) என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த இரண்டே வாரங்களுக்குள், தொழிலதிபர் எலோன் மஸ்க் அந்த அந்தஸ்தை இழந்துள்ளார்.அவரது ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின்...
வெனிசுலாவில் 7.1 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
வெனிசுலாவின் கடற்கரையோரப் பகுதியில் 7.1 மெக்னிடியூட் வலுவளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கம் காரணமாக நாட்டின் தலைநகரான கராகஸ் (Caracas)...
ஈரணுடனான போரில் ஏற்பட்ட ஆயுத இழப்பை ஈடுகட்ட 80 பில்லியன் டொலர்களை கோரும் பென்டகன்!
அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் தனிந்துள்ள நிலையில், இப்போரால் அமெரிக்கா பெரும் ஆயுத இழப்புகளை சந்தித்துள்ளது. இவற்றை ஈடுகட்ட அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் 80 பில்லியன் டொலர்...
செனட் சபை கொண்டு வந்துள்ள போர் அதிகாரச் சட்டம் தொடர்பான வாக்கெடுப்பு தேவையற்றது – டிரம்ப் விமர்சனம்
ஈரான் நாடு தற்போது கடுமையான நெருக்கடியில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவிற்கு தேவையான அனைத்தையும் வழங்க ஈரான் தயாராக இருக்கும் இந்தச் சூழலில், அமெரிக்க...
ஈரான் போரை நிறுத்த செனட் வாக்கெடுப்பு: ட்ரம்புக்கு பின்னடைவு!
ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு உத்தரவிடும் சட்டமூலத்தை அமெரிக்க செனட் சபை செவ்வாயன்று (23) ஆதரித்தது. இது, பெருகிவரும் அமைதியின்மையுடன்...
பறவைக் காய்ச்சல் பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ள அவுஸ்திரேலியா!
அதிக நோயுண்டாக்கும் H5N1 பறவைக் காய்ச்சலின் இரண்டு பாதிப்புகள் உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய அதிகாரிகள் கண்காணிப்பையும் பரிசோதனைகளையும் தீவிரப்படுத்தினர். அதே நேரத்தில், அண்டை நாடான பப்புவா நியூ...










