• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 19, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

கண்ணீர் கடலில் முள்ளிவாய்க்கால்.!

Mathavi by Mathavi
May 18, 2026
in இலங்கை செய்திகள்.
0
கண்ணீர் கடலில் முள்ளிவாய்க்கால்.!
Share on FacebookShare on Twitter

தமிழினப் படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (மே 18) முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடித் தமது உறவுகளுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

இன்று காலை 10:15 மணியளவில் தவத்திரு அகத்தியர் அடிகளாரால் கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் முறைப்படி ஆரம்பமாகின.

2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரின்போது படுகொலை செய்யப்பட்ட இலட்சக்கணக்கான உறவுகளின் நினைவாக இந்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

காலை 10:29 மணியளவில் நினைவொலி எழுப்பப்பட்டு, முள்ளிவாய்க்கால் மண்ணே அதிர்ந்தது.

காலை 10:30 மணியளவில் உயிரிழந்த உறவுகளுக்காக இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இறுதிப் போரில் தனது குடும்பத்தின் நான்கு உறுப்பினர்களைப் பலிகொடுத்த வற்றாப்பளையைச் சேர்ந்த சிறீறஞ்சன் ரினோசா பொதுச்சுடரை ஏற்றி வைத்தார்.

அதேநேரத்தில், நினைவேந்தல் முற்றத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களும் ஒற்றைச் சுடர்களை ஏற்றி, மலர் தூவித் தமது உறவுகளுக்காகக் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

முல்லைத்தீவு மற்றும் வடக்கு, கிழக்கின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.

17 ஆண்டுகள் கடந்தும், நீதிக்காகக் காத்திருக்கும் தமிழ் மக்களின் தளராத உறுதியை வெளிப்படுத்தும் விதமாக இன்றைய நிகழ்வு அமைந்திருந்தது.

முள்ளிவாய்க்கால் முற்றமே மக்களின் கண்ணீராலும், சுடரொளியாலும் நிறைந்திருக்க, “நாம் இன்னும் மறக்கவில்லை” என்கின்ற செய்தி உலகுக்கு உரக்கச் சொல்லப்பட்டது.

Related Posts

இலங்கை ஊடகவியலாளர் தேசமாணி இர்ஷாத் ரஹ்மத்துல்லாவுக்கு தமிழகத்தின் தங்க மகன் விருது.!

இலங்கை ஊடகவியலாளர் தேசமாணி இர்ஷாத் ரஹ்மத்துல்லாவுக்கு தமிழகத்தின் தங்க மகன் விருது.!

by Mathavi
May 18, 2026
0

தமிழ் கலை மற்றும் பண்பாடு மற்றும் தமிழ் ஊடகத் துறைக்கு சிறப்பான பங்களிப்புகள் மற்றும் அர்ப்பணிப்பான சேவைகளைப் பாராட்டி இலங்கையினை சேர்ந்த ஊடகவியலாளர் தேசமாணி இர்ஷாத் ரஹ்மத்துல்லாவுக்கு...

18ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தீர்வு திட்டத்தை முன்னெடுக்கும் ஆண்டாக உலகுக்கு சொல்ல வேண்டும்.!

18ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தீர்வு திட்டத்தை முன்னெடுக்கும் ஆண்டாக உலகுக்கு சொல்ல வேண்டும்.!

by Mathavi
May 18, 2026
0

18ஆவது முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவாண்டாவது ஒரு சடங்காக இல்லாமல் விடியலுக்கான ஒரு தீர்வு திட்டத்தை முன்னெடுக்கின்ற ஆண்டாக இந்த உலகிற்கு சொல்ல வேண்டும் என தென்னிந்திய பிரபல...

அறிவொளி வாசிப்புத்திறன் போட்டி ஆரம்பம்.!

அறிவொளி வாசிப்புத்திறன் போட்டி ஆரம்பம்.!

by Mathavi
May 18, 2026
0

வாசிப்பு மேம்பாட்டை உயர்த்தும் நோக்கில், நாவல் நகர் கதிரேசன் மாதிரி ஆரம்பப் பாடசாலையில் ‘அறிவொளி வாசிப்புத்திறன் போட்டி’ இன்று இனிதே ஆரம்பமானது. இப்போட்டிகள் இந்த வாரம் முழுவதும்...

விமல் வீரவன்ச மற்றும் அவரது குழுவினர் மீது சட்ட நடவடிக்கை.!

விமல் வீரவன்ச மற்றும் அவரது குழுவினர் மீது சட்ட நடவடிக்கை.!

by Mathavi
May 18, 2026
0

கொழும்பில் இன்று (18) போர் வீரர்கள் நினைவு நாள் ஒத்திகைக்கு இடையூறு விளைவித்ததற்காக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் அவரது குழுவினர் மீது சட்ட...

மல்வானை வீட்டை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க பிரதமர் சம்மதம்.!

மல்வானை வீட்டை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க பிரதமர் சம்மதம்.!

by Mathavi
May 18, 2026
0

பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததால் மல்வானை வீட்டிலிருந்து வெளியேறவுள்ளதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது. பசில் ராஜபக்சவிற்கு சொந்தமானது எனக் கருதப்படும் மல்வானை பகுதியில் அமைந்துள்ள காணி மற்றும் வீட்டை...

பிரதமர் ஹரிணி இங்கிலாந்துக்கு விஜயம்.!

பிரதமர் ஹரிணி இங்கிலாந்துக்கு விஜயம்.!

by Mathavi
May 18, 2026
0

இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெறவுள்ள அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (18) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். பிரதமருடன்...

யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.!

யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.!

by Mathavi
May 18, 2026
0

தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் இன்று (மே 18) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து, பல்கலைக்கழக...

விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் பாராட்டி கௌரவிப்பு.!

விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் பாராட்டி கௌரவிப்பு.!

by Mathavi
May 18, 2026
0

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் கோட்டமட்ட சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் ஆறு போட்டியில் பங்குபற்றி ஐந்து போட்டிகளில் முதலாம்...

டித்வா புயல் காரணமாக மாயமான முச்சக்கரவண்டி மீட்பு.!

டித்வா புயல் காரணமாக மாயமான முச்சக்கரவண்டி மீட்பு.!

by Mathavi
May 18, 2026
0

டித்வா புயல் காரணமாக ஊவா பரணகம, மஸ்பன்ன நகருக்கு அருகில் மண்சரிவில் சிக்கிப் புதையுண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று 171 நாட்களுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மஸ்பன்ன நகரின் பேருந்து...

அடக்குமுறைக்கு எதிராக சகலரும் அணிதிரள்வோம்.!

அடக்குமுறைக்கு எதிராக சகலரும் அணிதிரள்வோம்.!

by Mathavi
May 18, 2026
0

தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பால் ஈழத் தமிழினத்தின் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் தற்போதைய சவால்களை உள்ளடக்கிய...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி