மலேசியாவில் எதிர்வரும் 21 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்ற சர்வதேச ‘2s இன்டர்நேஷனல் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப்’ போட்டியில் கலந்து கொள்ள செல்லும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ருக்குனுதீன் நைலா ( RUKKUNUTHEEN NYLA) உள்ளடங்களாக சாதனை மாணவர்கள் 5 பேரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (17) ஞாயிற்றுக்கிழமை காலை வி.சி.எம்.ரி (V.C.M.T) கலை மன்றத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்டத்தில் பிரபல கராத்தே ஆசிரியர் அந்தோனி இன்பராஜ் அவர்களின் ஏற்பாட்டில், மன்னார் மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஆர்.எம்.ஜஸ்மின் தலைமையில் குறித்த கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
கராத்தே ஆசிரியர் அந்தோனி இன்பராஜ் அவர்களினால் பயிற்றுவிக்கப்பட்ட மாணவியான ருக்குனுதீன் நைலா என்பவர் மலேசியாவில் எதிர்வரும் 21 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்ற சர்வதேச ‘2s இன்டர்நேஷனல் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப்’ போட்டியில் 14 வயது பெண்கள் பிரிவில் 52 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொள்ள உள்ளார்.
மன்னார் உப்புக்குளம் கிராமத்தில் வசித்து வரும் மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலை மாணவியான ருக்குனுதீன் நைலா என்பவர் வட மாகாணத்தில் இருந்து செல்லும் ஐந்து மாணவர்களில் ஒருவராவார்.
இந்த நிலையில் தேசிய ரீதியாக ஐந்து மாணவர்கள் இடங்களை பெற்ற நிலையில் அவர்களை கௌவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன், நகர சபை உறுப்பினர் முஹமட் இம்சாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது குறித்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதோடு மலேசியாவில் எதிர்வரும் 21 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்ற சர்வதேச ‘2s இன்டர்நேஷனல் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப்’ போட்டியில் கலந்து கொள்ள உள்ள மாணவியும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.














