நிந்தவூர் கலாச்சார மண்டபத்தின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பித்து வைக்கும் நோக்கில் ஜனாதிபதி எதிர்வரும் வாரத்தில் நிந்தவூருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதனையடுத்து ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் தொடர்பான ஆய்வுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை 15 ஆம் திகதி ஜனாதிபதி செயலக அதிகாரிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர், மாவட்ட அரசாங்க அதிபர், உள்ளூராட்சி ஆணையாளர், இலங்கை பொலிஸ் அதிகாரிகள், முப்படை அதிகாரிகள், பிரதேச செயலாளர், உள்ளிட்ட உயரதிகாரிகள் நிந்தவூர் கலாச்சார மண்டபத்திற்கு விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை நேரில் பார்வையிட்டனர்.
இதன்போது, கலாச்சார மண்டபத்தின் தற்போதைய நிலை, மீள ஆரம்பிக்கப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள் மற்றும் ஜனாதிபதி அவர்களின் விஜயத்துடன் தொடர்புடைய ஏற்பாடுகள் குறித்து விரிவான கலந்துரையாடல்களும் இடம்பெற்றிருந்தன.

Related Posts
குளியலறையில் இயங்கிய கள்ளச்சாராய ஆலையில் பொலிசார் சோதனை முன்னெடுப்பு!!
வீட்டின் குளியலறையில் இயங்கி வந்த கள்ளச் சாராய ஆலையில் அம்பாறை மாவட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். அம்பாறை மாவட்டம் தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஹேன...
டிஜிட்டல் உலகில் மாணவர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு செயலமர்வு!!
நீர்கொழும்பு - கொச்சிக்கடை NG/தோப்பு தோமஸ் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தில், “டிஜிட்டல் உலகின் பாதுகாப்பும் பொறுப்பும்” என்ற தலைப்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு 15 ஆம்...
சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபிக்கும் பணிகளுக்கு ஆதம்பாவா எம்.பியின் ஒத்துழைப்பைப் பெற ; பள்ளிவாசல் முன்னிற்க வேண்டும்!!
சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபிக்கும் பணிகளை ஜனாதிபதி ஊடாக துரிதப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் முழுமையான ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்கு...
முழு நாடும் ஒன்றாக விசேட நடவடிக்கையில் 176,000க்கும் மேற்பட்டோர் கைது!
முழு நாடும் ஒன்றாக தேசிய செயற் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் மூலமாக 176,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, 2025...
நுவரெலியாவில் பயங்கரம் ; ஆறு மாதங்களாகக் கூடாரங்களில் தவிக்கும் 23 குடும்பங்கள்!!
நுவரெலியா ஹக்கலை பகுதியில் கடந்த வருடம் ஏற்பட்ட ‘டிட்வா’ சூறாவளி மற்றும் மண்சரிவு காரணமாக வீடுகளை இழந்த 23 தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள், கடந்த ஆறு மாதங்களுக்கும்...
வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையற்ற ஆசிரிய இடமாற்றம் ; ஆளுநர் அலுவலகம் முன் கொட்டும் மழையில் ஆசிரியர்கள் போராட்டம்!
வடக்கு மாகாணத்தில் உள்ள ஊழல் அதிகாரிகளால் இடமாற்றச் சபையை மீறி ஆசிரிய இடமாற்றம் வழங்கப்பட்டமையை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை கொட்டும் மழையிலும் ஆளுநர் அலுவலகம் முன் இலங்கை...
இலங்கைக்கான தனது வலுவான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய சர்வதேச நாணய நிதியம்!
விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் இலங்கையின் ஒருங்கிணைந்த ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து பரிசீலிப்பதற்காக, தனது நிர்வாகக் குழு வரும் வாரங்களில்...
நாட்டின் பல பகுதிகளுக்கும் வானிலை குறித்த சிவப்பு எச்சரிக்கை!
பலத்த மழை காரணமாக மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று 15...
மயக்க மருந்து கொடுத்து சிறுமி கடத்தல் ; சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த தந்தை!
மட்டக்களப்பு நகரில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்ற கும்பலைச் சிறுமியின் தந்தை விரட்டிப் பிடித்து, மயங்கிய நிலையில் இருந்த மகளை...
‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’: திருகோணமலையில் புதிய வீடுகள் கையளிப்பு!
அரசாங்கத்தின் ‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்ட, குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, கும்புறுப்பிட்டி பகுதியில் வீடற்றவர்களுக்கான...










