• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 8, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு தண்டனை வழங்குவதை விரைவுபடுத்துக.!

Mathavi by Mathavi
May 8, 2026
in இலங்கை செய்திகள்.
0
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு தண்டனை வழங்குவதை விரைவுபடுத்துக.!
Share on FacebookShare on Twitter

இலங்கையிலிருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிப்பதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் மற்றும் மறுசீரமைப்புகளை மிக விரைவாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்குக் கடும் உத்தரவு பிறப்பித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டுச் சபையின் கூட்டத்திலேயே அவர் இதனை வலியுறுத்தினார்.

கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் மீண்டும் எக்காரணம் கொண்டும் சமூகத்துக்குள் ஊடுருவுவதைத் தடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி எச்சரித்தார். அவற்றைச் சட்டபூர்வமான நடைமுறைகளின் கீழ் விரைவாக அழிப்பதற்கும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குத் தண்டனை வழங்கும் செயற்பாடுகளைத் துரிதப்படுத்துவதற்கும் அவர் அறிவுறுத்தினார்.

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு ஆரம்பிக்கப்பட்ட 2025 அக்டோபர் 30 முதல் இதுவரை கிடைத்துள்ள முன்னேற்றங்கள் குறித்து கூட்டத்தில் ஆராயப்பட்டது. அதன் விவரங்கள் வருமாறு,

  • கைது செய்யப்பட்டவர்கள்: ஒரு இலட்சத்து 68 ஆயிரத்து 460 சந்தேகநபர்கள்.
  • கைப்பற்றப்பட்டவை: சுமார் 5437 கிலோ கஞ்சா, 1936 கிலோ ஹெரோயின், 1991 கிலோ ஐஸ் போதைப்பொருள் மற்றும் 15 இலட்சத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகள்.

இந்தச் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் சுற்றிவளைப்புகள் 80 வீதத்தால் அதிகரித்துள்ளன என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்காக 2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க புனர்வாழ்வு (திருத்த) சட்டமூலத்தை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புனர்வாழ்வு பெற்றவர்கள் மீண்டும் போதைக்கு அடிமையாவதைத் தடுக்க சுயதொழில் பயிற்சிகள் மற்றும் மனப்பாங்கு அபிவிருத்தித் திட்டங்களை மத வழிபாட்டுத் தலங்களை மையப்படுத்தி முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

போதைப்பொருள் தொடர்பான வழக்குகளுக்காகத் தனியான நீதிமன்றத்தை நிறுவுதல் மற்றும் இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைகளை விரைவாகப் பெற்று வழக்குத் தொடர்வதை துரிதப்படுத்துவது குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. சிறைச்சாலை நெரிசலைத் தவிர்க்க போதைப்பொருள் குற்றவாளிகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளை வேகப்படுத்துமாறும் அவர் குறிப்பிட்டார்.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் விநியோகத்தைத் தடுக்க கல்வி அமைச்சு மற்றும் மகளிர் பணியகம் இணைந்து விசேட திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், ஜூன் 26 சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பாரிய விழிப்புணர்வுப் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மகா சங்கத்தினர், மதத் தலைவர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts

இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து; தரைமட்டமான பேருந்து தரிப்பிடம்.!

இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து; தரைமட்டமான பேருந்து தரிப்பிடம்.!

by Mathavi
May 8, 2026
0

புத்தளம், மதுரங்குளி நகரில் இன்று காலை இடம்பெற்ற பாரிய விபத்தில் கொள்கலன் லொறியின் சாரதி படுகாயமடைந்ததுடன், பொதுச் சொத்துக்களுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. மதுரங்குளி நகரின் பிரதான...

காணி தொடர்பான பல்வேறு சட்ட மற்றும் நிர்வாக விடயங்கள் தொடர்பாக அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தல்.!

காணி தொடர்பான பல்வேறு சட்ட மற்றும் நிர்வாக விடயங்கள் தொடர்பாக அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தல்.!

by Mathavi
May 8, 2026
0

காணி உரிமைச் சட்டங்கள் மற்றும் அரச காணி முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு மாந்தை மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை(8) காலை நடைபெற்றது. மன்னார்...

சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் வடபுல மாணவர்களை இணைக்கும் Study In யாழ்ப்பாண கல்வி நிறுவனம் திறப்பு.!

சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் வடபுல மாணவர்களை இணைக்கும் Study In யாழ்ப்பாண கல்வி நிறுவனம் திறப்பு.!

by Mathavi
May 8, 2026
0

வடபகுதி மாணவர்களின் சர்வதேச உயர்கல்விக் கனவை நனவாக்கும் நோக்குடன், சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் அவர்களை நேரடியாக இணைக்கும் Study In யாழ்ப்பாணம் கல்வி நிறுவனத்தின் பிரமாண்ட திறப்பு விழா...

மட்டக்களப்பில் மீட்கப்பட்ட இரு ஆண்களின் சடலங்களும் அடையாளம் காணப்பட்டது.

மட்டக்களப்பில் மீட்கப்பட்ட இரு ஆண்களின் சடலங்களும் அடையாளம் காணப்பட்டது.

by Mathavi
May 8, 2026
0

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னஉப்போடை களப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ள சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. சின்னஉப்போடையில் உள்ள களப்பின் பாலத்திற்கு அருகில் இந்த சடலங்கள் நேற்று மாலை...

இங்கு சிங்கள மக்கள் வீதியில் இறங்கினால் எவரும் தப்ப முடியாது.!

இங்கு சிங்கள மக்கள் வீதியில் இறங்கினால் எவரும் தப்ப முடியாது.!

by Mathavi
May 8, 2026
0

இனவாதத்தைத் தூண்டி நாட்டைப் பிளவுபடுத்த எத்தனித்தால், சிங்கள மக்கள் அதற்குப் பாடம் புகட்டுவார்கள் என்று ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்....

பருத்தித்துறை மீன் சந்தை வியாபாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட கலந்துரையாடல்.!

பருத்தித்துறை மீன் சந்தை வியாபாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட கலந்துரையாடல்.!

by Mathavi
May 8, 2026
0

பருத்தித்துறை மீன் சந்தை வியாபாரிகள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் மற்றும் சந்தை நிர்வாகம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) காலை 10:30 மணியளவில்...

கைதி ஒருவர் உயிரிழப்பு; சிறைக் காவலர்கள் மூவர் கைது.!

கணினி குற்றங்களில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் கைது.!

by Mathavi
May 8, 2026
0

பொரலஸ்கமுவ, 10ஆம் மைல்கல் பகுதியில், கணினி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 30 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 20 முதல் 54 வயதுக்குட்பட்ட சீன மற்றும்...

திடீரென இடிந்து விழுந்த கட்டிடத்தின் மேல் பாகங்கள்; மாணவிகள் படுகாயம்.!

திடீரென இடிந்து விழுந்த கட்டிடத்தின் மேல் பாகங்கள்; மாணவிகள் படுகாயம்.!

by Mathavi
May 8, 2026
0

கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடன நிறுவகத்தின் மாடி கட்டிடத்தின் மேல் பாகங்கள் இடிந்து வீழ்ந்ததில் நடனப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இறுதி வருட...

நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு; முல்லைத்தீவில் அஞ்சல் வாகன சேவை ஆரம்பம்.!

நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு; முல்லைத்தீவில் அஞ்சல் வாகன சேவை ஆரம்பம்.!

by Mathavi
May 8, 2026
0

முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலவி வந்த அஞ்சல் வாகன சேவை குறைபாட்டிற்கு தீர்வாக இன்று முதல் அஞ்சல் வாகனம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர்...

திண்மக்கழிவு முகாமைத்துவம் குறித்த விசேட சபைக் கூட்டம்.!

திண்மக்கழிவு முகாமைத்துவம் குறித்த விசேட சபைக் கூட்டம்.!

by Mathavi
May 8, 2026
0

பருத்தித்துறை நகரப் பகுதிகளில் அதிகரித்து வரும் திண்மக்கழிவுப் பிரச்சினைகளுக்கு நீண்டகாலத் தீர்வுகளைக் காணும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட சபைக் கூட்டம் இன்று காலை நகரசபை மண்டபத்தில்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி