பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான தீர்மானம், நாடாளுமன்றத்தில் 139 மேலதிக வாக்குகளால் நேற்று நிறைவேற்றப்பட்டது.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று நாடாளுமன்றம் கூடியபோது, அவசரகாலச் சட்ட நீடிப்பு தொடர்பான விவாதம் இடம்பெற்றது.
விவாதத்தின் இறுதியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது ஆதரவாக 145 வாக்குகளும், எதிராக 6 வாக்குகளும் கிடைத்தன.
எதிராக எதிரணியில் இருந்து 6 வாக்குகள் மாத்திரமே அளிக்கப்பட்டன. எனினும், ஆளும் தரப்பின் பெரும் ஆதரவுடன் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாட்டில் அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்துக்கு அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Posts
இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து; தரைமட்டமான பேருந்து தரிப்பிடம்.!
புத்தளம், மதுரங்குளி நகரில் இன்று காலை இடம்பெற்ற பாரிய விபத்தில் கொள்கலன் லொறியின் சாரதி படுகாயமடைந்ததுடன், பொதுச் சொத்துக்களுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. மதுரங்குளி நகரின் பிரதான...
காணி தொடர்பான பல்வேறு சட்ட மற்றும் நிர்வாக விடயங்கள் தொடர்பாக அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தல்.!
காணி உரிமைச் சட்டங்கள் மற்றும் அரச காணி முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு மாந்தை மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை(8) காலை நடைபெற்றது. மன்னார்...
சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் வடபுல மாணவர்களை இணைக்கும் Study In யாழ்ப்பாண கல்வி நிறுவனம் திறப்பு.!
வடபகுதி மாணவர்களின் சர்வதேச உயர்கல்விக் கனவை நனவாக்கும் நோக்குடன், சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் அவர்களை நேரடியாக இணைக்கும் Study In யாழ்ப்பாணம் கல்வி நிறுவனத்தின் பிரமாண்ட திறப்பு விழா...
மட்டக்களப்பில் மீட்கப்பட்ட இரு ஆண்களின் சடலங்களும் அடையாளம் காணப்பட்டது.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னஉப்போடை களப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ள சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. சின்னஉப்போடையில் உள்ள களப்பின் பாலத்திற்கு அருகில் இந்த சடலங்கள் நேற்று மாலை...
இங்கு சிங்கள மக்கள் வீதியில் இறங்கினால் எவரும் தப்ப முடியாது.!
இனவாதத்தைத் தூண்டி நாட்டைப் பிளவுபடுத்த எத்தனித்தால், சிங்கள மக்கள் அதற்குப் பாடம் புகட்டுவார்கள் என்று ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்....
பருத்தித்துறை மீன் சந்தை வியாபாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட கலந்துரையாடல்.!
பருத்தித்துறை மீன் சந்தை வியாபாரிகள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் மற்றும் சந்தை நிர்வாகம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) காலை 10:30 மணியளவில்...
கணினி குற்றங்களில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் கைது.!
பொரலஸ்கமுவ, 10ஆம் மைல்கல் பகுதியில், கணினி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 30 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 20 முதல் 54 வயதுக்குட்பட்ட சீன மற்றும்...
திடீரென இடிந்து விழுந்த கட்டிடத்தின் மேல் பாகங்கள்; மாணவிகள் படுகாயம்.!
கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடன நிறுவகத்தின் மாடி கட்டிடத்தின் மேல் பாகங்கள் இடிந்து வீழ்ந்ததில் நடனப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இறுதி வருட...
நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு; முல்லைத்தீவில் அஞ்சல் வாகன சேவை ஆரம்பம்.!
முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலவி வந்த அஞ்சல் வாகன சேவை குறைபாட்டிற்கு தீர்வாக இன்று முதல் அஞ்சல் வாகனம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர்...
திண்மக்கழிவு முகாமைத்துவம் குறித்த விசேட சபைக் கூட்டம்.!
பருத்தித்துறை நகரப் பகுதிகளில் அதிகரித்து வரும் திண்மக்கழிவுப் பிரச்சினைகளுக்கு நீண்டகாலத் தீர்வுகளைக் காணும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட சபைக் கூட்டம் இன்று காலை நகரசபை மண்டபத்தில்...










